ஐபிஎல்: ராஜஸ்தானைத் தோற்கடித்தது சென்னை

ஐபிஎல்: ராஜஸ்தானைத் தோற்கடித்தது சென்னை

2 mins read

சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங் கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாகை சூடியது. ராஜஸ்தான் அணியை அது 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ராஜஸ்தான் முதலில் பந்து வீசியது. முதலில் பந்தடித்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ஓட்டங்கள் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் சென்னை அணியின் பந்தடிப் பாளர்கள் 87 ஓட்டங்களைச் சேகரித்தனர். டோனி 75 ஓட்டங்களுடனும் ரவீந்திர ஜடேஜா 8 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர் 176 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பிராவோ வீசினார். 46 ஓட்டங்கள் எடுத்திருந்த பென் ஸ்டோக்ஸ் ஓங்கி அடித்த பந்தை சென்னை யின் ரெய்னா பிடித்தார். எஞ்சிய 5 பந்துகளில் பிராவோ மேலும் ஒரு விக்கெட்டை சாய்த்ததோடு 3 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து வெற்றியை உறுதி செய்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 167 ஓட்டங்களே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னை அணி தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் டோனி நேற்று முன்தினம் 75 ஓட்டங்கள் குவித்தார். இதுவே சேப்பாக்கத்தில் அவர் எடுத்த அதிகபட்ச ஓட்டமாகும். இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 67 ஓட்டம் எடுத்து இருந்ததே டோனியின் அதிகபட்ச மான ஓட்டமாக இருந்தது.