ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு படுதோல்வி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு படுதோல்வி

2 mins read

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணிக்கு எதிரான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படுதோல்வி அடைந்தது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்தடித்தது. 100 ஓட்டங்கள் எடுத்த வார்னர் ஆட்டமிழக்காமல் இருந் தார். பேர்ஸ்டோவ் 114 ஓட்டங்கள் எடுத்தார். இவர்கள் அடித்த சதங்களால் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது. அதையடுத்து 232 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. பார்தீவ் பட்டேல் 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இப்படி தொடர்ந்து பெங்களூரு அணியின் முன்னணி பந்தடிப் பாளர்களை வெளியேற்றினார் ஹைதராபாத்தின் முகம்மது நபி. நான்கு ஓவர்களுக்குள்ளேயே 22 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு திக்குமுக்குமாடியது. 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் விராத் கோஹ்லி சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந் தார். 36 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு தடுமாறியது. கொலின் டி கிராண்ட்ஹம் 37 ஓட்டங்களும் பிரயாஸ் பர்மன் 19 ஓட்டங்களும் அடிக்க பெங்களூரு அணி 113 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது. முகம்மது நபி 4 ஓவர்களில் 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டு களைக் கைப்பற்றினார். மற்றோர் ஆட்டக்காரர் சந்தீப் சர்மா 3 விக்கெட்டு களை வீழ்த்தினார்.