சுடச் சுடச் செய்திகள்

மூன்றாம் நிலையில் ஆர்சனல்

நியூகாசல் யுனைடெட் காற்பந்து குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று நேற்று ( 1 ஏப்ரல்) பிரிமியர் லீக் பட்டியலின் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது ஆர்சனல் காற்பந்து குழு. 

ஆரன் ராம்சியும் அலெக்சாண்டர் லக்காஸெட்டும் அடித்த இரண்டு கோல்கள், ஆர்சனலின் பரம எதிரிகளான டோட்டன்ஹேமையும் மான்செஸ்டர் யுனைடெட்டையும் லீக் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.  

பிரிமியர் லீக் போட்டியில் இன்னும் 7 ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் தற்போது ஆர்சனல் 63 புள்ளிகளைப் பெற்றுள்ளது. டோட்டன்ஹேமையும் மான்செஸ்டர் யுனைடெட்டையும்விட இரண்டு புள்ளிகள் அதிகமான நிலையில் ஆர்சனல் உள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் பிரிமியர் லீக் பட்டியலின் முதல் நான்கு நிலைகளில் வரவும் அடுத்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்குபெறுவதற்கும் ஆர்சனல் குழுவின் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.  

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon