சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் தோல்வியுற்றதற்கு, கடைசி 5 ஓவரில் சிறப்பாக விளையாடாததே காரணம் என்று ராஜஸ்தான் அணியின் தலைவர் ரஹானே (படம்) தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் முதல் 10 ஓவர்களில் நன்றாக செயல்பட் டோம். ஆனால் கடைசி 5 ஓவர் களில் சென்னை அணியின் ஸ்கோரை நாங்கள் கட்டுப்படுத்த தவறிவிட்டோம். அதுவே எங் களுக்குப் பாதிப்பாக அமைந்தது. டோனிக்கு எதிராக பந்து வீசுவது எங்கள் அணி வீரர் களுக்குக் கடினமாக இருந்தது. ஆறுÿஓவர்களுக்குப் பிறகு பந்தை சரியான முறையில் பிடித் துப் பந்து வீசுவதே சிரமமாக இருந்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சிறப் பாக பந்து வீசியதுடன் விக்கெட் டும் வீழ்த்தினார்கள். நாங்கள் பேட்டிங்கில் இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடைசி 3 லீக் ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாக விளையாடினா லும் அதிர்ஷ்டம் இல்லை' என்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் பந்து வீச வழக்கமான நேரத்தை விடக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதாக எழுந்த புகாரை விசாரித்த போட்டி அமைப்புக் குழு அந்த அணியின் அணித்தலைவர் ரஹானேவுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது.
ரஹானே: கடைசி 5 ஓவரில் சிறப்பாக செயல்படாததே தோல்விக்குக் காரணம்
1 mins read
-

