லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நியூகாசலை 2-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வீழ்த்தியது. இதன் மூலம் லீக் பட்டியலில் ஆர்சனல் மூன்றாவது இடத் துக்கு முன்னேறியுள்ளது. ஆட்டம் தொடங்கி ஏறத்தாழ அரை மணி நேரத்தில் ஆர்சனலின் ஏரன் ரேம்சே கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். அதுவரை விட்டுக்கொடுக் காமல் பிடிவாதமாக நின்ற நியூகாசலின் தற்காப்பு ஆட்டக் காரர்களுக்கு ஏமாற்றம். இடை வேளையின்போது ஆர்சனல் 1-0 எனும் கோல் கணக்கில் முன் னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டத்தில் ஆட்டத் தைச் சமன் செய்ய நியூகாசல் வீரர்கள் தீவிர முயற்சியில் இறங் கினர். ஆனால் அவர்களது முயற்சிகளை ஆர்சனலின் தற்காப்பு முறியடித்தது. இந்நிலையில் ஆட்டம் முடிய ஏறத்தாழ ஏழு நிமிடங்கள் இருந்தபோது ஆர்சனலின் இரண் டாவது கோலை அலெக்சாண்ட்ரே லகாசேட் போட்டார். இது ஆர்சன லின் வெற்றியை உறுதி செய்தது. இன்னும் ஏழு ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் வேளையில் ஆர்சனல் 63 புள்ளிகள் பெற்று லீக் பட்டியலில் மூன்றாவது இடத் தில் உள்ளது. ஸ்பர்ஸ், மான்செஸ்டர் யுனை டெட் ஆகிய குழுக்களைவிட அது இரண்டு புள்ளிகள் அதிகம் பெற் றுள்ளது. இதனால் லீக் பட்டியலில் முதல் நான்கு இடத்தில் வந்து அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அது வலுப்படுத் திக்கொண்டது. "நியூகாசலின் பெனால்டி எல்லைக்குள் இருக்கும்போது பொறுமையாக இருக்க வேண்டும் என்று எங்களிடம் பயிற்றுவிப்பாளர் கூறினார். அதுமட்டுமல்லாது கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார அவர். அவர் சொன்னது போலவே நாங்களும் விளை யாடினோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்," என்று பெருமிதத்துடன் கூறினார் கோல் நாயகன் லகசேட்.
நியூகாசலை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆர்சனல்
2 mins read
வலையை நோக்கி பந்தை அனுப்பும் ஆர்சனலின் அலெக்சாண்ட்ரே லகசேட் (நடுவில்). படம்: ஏஎஃப்பி -

