சென்னை: வெற்றிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி அளித்த பேட்டியில், "நாங்கள் பங்காளித்துவம் ஆட்டத்தில் நிலைத்து நின்று ஓட்டங்களைக் குவிக்க வேண்டி யது அவசியமானதாக இருந்தது. பனியின் தாக்கம் இருக்கும் என்பதை நாங்கள் அறிந்து இருந் தோம். பந்தடிக்கும் வீரர்கள் ஆட்டம் இழக்காமல் இருந்தால்தான் கடைசி கட்ட ஓவர்களிலும் எங் களால் விரைவாக ஓட்டங்கள் சேர்க்க முடியும் என்று நினைத்து ஆடினோம். எதிரணியில் இடது கை பந் தடிப்பாளர்கள் மிகவும் குறைவாக இருந்ததால் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சான்ட் னெர் ஆடும் லெவனில் சேர்க்கப் பட்டார். இம்ரான் தாகிர் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. மற்ற சுழற் பந்து வீச்சாளர்கள் ஓட்டங்கள் விட்டுக்கொடுத்ததால் வேகப்பந்து வீச்சாளர்கள் தங் களது திட்டத்தை செயல்படுத்து வதில் சிக்கல் ஏற்பட்டது. இனி வரும் ஆட்டங்களில் எல்லாருக் கும் வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப் படும் என்றார். "இனி வரும் போட்டிகளில் வீரர்கள் தங்கள் ஆட்ட திட் டத்தை சிறப்பாக அமல்படுத்துவார் கள் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.
டோனி: ஓட்டங்களைக் குவிப்பது எங்களுக்கு அவசியமானதாக இருந்தது
1 mins read
-

