விரக்தியில் விராத் கோஹ்லி

விரக்தியில் விராத் கோஹ்லி

1 mins read

ஜெய்ப்பூர்: இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமையேற்று வெற்றி மேல் வெற்றி தேடித் தந்து வரும் விராத் கோஹ்லியால் ஐபிஎல் டி20 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒருமுறை கூட கிண்ணம் வென்று தர முடிய வில்லை. ஒவ்வொரு பருவத்திலும் இம் முறை சாதிப்போம் எனச் சூளு ரைத்து, பின் ஏமாற்றத்துடன் வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பெங்களூரு அணி யின் தொடக்கம் இம்முறை படு மோசமாக அமைந்துள்ளது. முதல் நான்கு ஆட்டங்களிலும் தோற்று அவ்வணி கடைசி நிலையிலுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யுடன் நேற்று முன்தினம் மோதிய ஆட்டத்தில் பெங்களூரு அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பந்தடித்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங் களை எடுத்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 67 ஓட்டங் களைக் குவித்தார். இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணியில் பட்லர் (59), ஸ்டீவ் ஸ்மித் (38), திரிபாதி (34) ஓட்டங்களை விளாச, ஒரே ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் அந்த அணி வென்றது. 15-20 ஓட்டங்கள் குறைவாக எடுத்ததே தோல்விக்குக் காரணம் என்றார் விராத் கோஹ்லி.