எச்சரிக்கும் மேன்யூ நிர்வாகி

எச்சரிக்கும் மேன்யூ நிர்வாகி

2 mins read
daccae0f-2490-45a4-a98e-73a94cb35fdf
சொந்த கோல் போட்டு மேன்யூவிற்கு தோல்வி தேடித் தந்த கிறிஸ் ஸ்மாலிங் (வலது). படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: உல்வர்ஹேம்டன் வாண் டரர்ஸ் காற்பந்துக் குழுவிற்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனை டெட் குழு 2-1 என்ற கோல் கணக்கில் தோற்று அதிர்ச்சி அளித்தது. மேன்யூ வீரர் ஸ்காட் மெக்டா மினே 13வது நிமிடத்தில் பெற்றுத் தந்த முன்னிலை 12 நிமிடங் களுக்கு மட்டுமே நீடித்தது. உல்வ்ஸ் வீரர் டியோகோ ஜோட்டா அடித்த கோலால் இடைவேளையின் போது ஆட்டம் 1-1 எனச் சம நிலையில் இருந்தது. ஆஷ்லி யங் 57வது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்றதால் சிவப்பு அட்டை காட் டப்பட்டு திடலைவிட்டு வெளியேற் றப்பட்டார். இதனால் பத்து வீரர் களைக் கொண்டு ஆடத் தள்ளப் பட்ட மேன்யூவிற்கு மேலும் பின்ன டைவை ஏற்படுத்தினார் கிறிஸ் ஸ்மாலிங். ஆட்டம் முடிய 13 நிமிடங்களே இருந்தபோது அவர் தமது குழுவின் வலைக்குள்ளேயே பந்தை உதைத்து சொந்த கோல் அடிக்க, உல்வ்ஸ் 2-1 என எதிர் பாராத வெற்றியைப் பெற்றது. ஆஷ்லி யங்கிற்குச் சிவப்பு அட்டை காட்டியதன் மூலம் பிரி மியர் லீக் ஆட்டத்தில் 100 முறை சிவப்பு அட்டையைப் பயன்படுத் திய முதல் நடுவர் எனும் பெருமை யைப் பெற்றார் மைக் டீன். உல்வ்ஸ் குழுவிடம் தோற்றதால் பட்டியலின் மூன்றாமிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த மேன்யூ, ஐந்தாம் நிலையிலேயே தொடர்கிறது. இன்னும் ஆறு ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் தோல்விப் பயணம் தொடர்ந்தால் பட்டியலின் முதல் நான்கு இடங்களுக்குள் முடிப்பதை மறந்துவிட வேண்டியது தான் என்று மேன்யூ நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் தமது வீரர்களை எச்சரித்துள்ளார்.