வெலன்சியாவிடம் வீழ்ந்த ரியால்

வெலன்சியாவிடம் வீழ்ந்த ரியால்

1 mins read

வெலன்சியா: முன்னணி ஸ்பானிய காற்பந்துக் குழுவான ரியால் மட்ரிட்டின் சோகம் தொடர்கிறது. நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் வெலன்சியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் ரியால் தோற்றுப் போனது. நடப்பு லா லீகாவில் அக்குழு இதுவரை ஒன்பது ஆட்டங்களில் தோற்றுள்ளது. ஸினடின் ஸிடான் நிர்வாகியாக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு அக்குழுவிற்குக் கிட்டிய முதல் தோல்வி இதுதான். மாறாக, தனது நூறாண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வெலன்சியா தொடர்ந்து 17 ஆட்டங்களாக வீழ்த்த முடியாத குழுவாக வீறுநடை போட்டு வருகிறது.