தரவரிசையில் சிங்கப்பூர் முன்னேற்றம்

தரவரிசையில் சிங்கப்பூர் முன்னேற்றம்

1 mins read

பாரிஸ்: உலகக் காற்பந்துத் தரவரிசையில் சிங்கப்பூர்க் குழு 160ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. 2017ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர்க் குழுவின் ஆக உயர்ந்த நிலை இதுதான். பெல்ஜியம், பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் முதல் மூன்று நிலைகளைத் தக்கவைத்துக்கொண்டன. இங்கிலாந்து நான்காம் நிலைக்கு முன்னேறியது. உலகக் கிண்ணப் போட்டிகளில் இறுதி வரை சென்ற குரோவே‌ஷியா ஐந்தாம் இடத்திற்கு இறங்கியது. இந்தியா 101ஆம் இடத்தையும் மலேசியா 168ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.