மும்பை: ஹார்திக் பாண்டியா பந்தடிப்பிலும் பந்துவீச்சிலும் மிளிர, மும்பை இந்தியஸ் அணி 37 ஓட்ட வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. நடப்பு வெற்றியாளரான சென்னை அணிக்கு இந்தப் பருவத்தில் கிட்டிய முதல் தோல்வி இதுதான். முதலில் பந்தடித்த மும்பை 18 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களையே எடுத்திருந்தது. ஆயினும், கடைசி இரண்டு ஓவர்களில் ஹார்திக் மூன்று சிக்சர்களையும் பொல்லார்ட் இரண்டு சிக்சர்களையும் விளாச, அவ்வணியின் ஓட்ட எண்ணிக்கை 170ஆக உயர்ந்தது. இலக்கை விரட்டிய சென்னை அணி முதல் இரண்டு ஓவர்களுக் குள்ளாகவே ராயுடு, வாட்சன் என இரு தொடக்க ஆட்டக்காரர்களை யும் இழந்தது. கேதார் ஜாதவ் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி 58 ஓட்டங் களை எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த தால் அந்த அணியால் 20 ஓவர் களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 25 ஓட்டங்களுடன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஹார்திக் ஆட்ட நாயகனானார்.
சென்னை அணிக்கு முதல் தோல்வி
1 mins read
தம்மைக் காணவே அரங்கிற்கு வந்துள்ளதாக மூதாட்டி ஒருவர் பதாகை ஏந்தியிருந்ததைக் கண்டதும் ஓய்வறையில் இருந்து இறங்கி வந்த டோனி, அவரைச் சந்தித்து, சென்னை அணிச் சீருடையில் கையெழுத்திட்டு, செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். படம்: சென்னை சூப்பர் கிங்ஸ்/டுவிட்டர் -

