சுடச் சுடச் செய்திகள்

இபிஎல்: முன்னணிக் குழுக்கள் முத்திரை

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டங்களில் மான்செஸ்டர் சிட்டி, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், செல்சி ஆகிய முன்னணிக் குழுக்கள் தத்தமது ஆட்டங்களில் எளிதாக வெற்றி பெற்றன.
எட்டிஹாட் அரங்கில் நடந்த ஆட்டத்தில் கார்டிஃப் சிட்டி குழுவை 2-0 என்ற கோல் கணக் கில் வெற்றி கொண்ட மான்செஸ்டர் சிட்டி, பட்டியலின் முதல் நிலைக்கு முன்னேறியது. இருப்பினும், இன்று அதிகாலை நடந்த ஆட்டத் தில் லிவர்பூல் குழு, சௌத்ஹேம் டன் குழுவை வீழ்த்தியிருந்தால் மேன்சிட்டி இரண்டாம் இடத்திற்கு இறங்கியிருக்கும்.
கார்டிஃபுக்கு எதிரான ஆட்டத் தின் ஆறாம் நிமிடத்திலேயே கோல் அடித்த மேன்சிட்டிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் கெவின் டி பிரய்ன. 
முற்பாதி ஆட்டம் முடிய ஒரே நிமிடம் இருந்தபோது  லிரோய் சானே அடித்த கோலால் அந்த முன்னிலை இரட்டிப்பானது. நடப்பு இபிஎல்லில் அவர் அடித்த 9வது கோல் இது.
மத்திய திடல் ஆட்டக்காரரான 18 வயது ஃபில் ஃபோடன் இந்தப் பருவத்தில் இதுவரை 24 ஆட்டங் களில் விளையாடி இருந்தாலும், நேற்றைய ஆட்டமே அவர் தொடக் கத்திலேயே களமிறங்கிய முதல் இபிஎல் ஆட்டமாக அமைந்தது.
அடுத்த பத்தாண்டுகளுக்கு மேன்சிட்டியின் மிக முக்கியமான ஆட்டக்காரராக ஃபோடன் திகழ் வார் என அக்குழுவின் நிர்வாகி கார்டியோலா கணித்துள்ளார்.
“இளம் வீரராக இருந்தபோதும் எதையும் நிகழ்த்திக் காட்டக்கூடிய வராக அவர் விளங்குகிறார். எல்லா ஆட்டங்களிலும் அவர் கோல் வாய்ப்புகளை உருவாக்கு கிறார்,” என மெச்சினார் கார்டி யோலா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon