சுடச் சுடச் செய்திகள்

‘டோனியைப் பார்த்து ஹெலிகாப்டர் ஷாட்டைக் கற்றுக்கொண்டேன்’

மும்பை: இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் = சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பந்தடித்த மும்பை இந்தியன்ஸ் அணி 170 ஓட்டங்கள் குவித்தது. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் அதிரடி பந்தடிப்பு முக்கிய காரணமாக அமைந்தது.
பிராவோ வீசிய கடைசி ஓவரில் அவர் இமாலய சிக்சர்களை விளாசினார். அதில் ஒன்று டோனி போன்று அற்புதமான வகையில் ஹெலிகாப்டர் ஷாட். 91 மீட்டர் தூரத்திற்குச் சென்றது. ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ஓட்டங்கள் குவித்ததுடன் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 
ஹெலிகாப்டர் ஷாட் குறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில், 
“இதுபோன்ற ஷாட்டை டோனி பலமுறை அடித்ததைப் பார்த் திருக்கிறேன். நான் அவர் அடிக்கும் ஷாட்களைப் பின்பற்ற முயல்கிறேன். அவரைப் பார்த்து கற்றுக்கொண்ட ஷாட்தான் இது,” என்றார் ஹர்திக் பாண்டியா. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon