ஆறு மேன்யூ வீரர்கள் குழுவைவிட்டு விலகக்கூடும் 

மான்செஸ்டர்: இப்பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி நிறைவு பெற்றதும் மான்செஸ்டர் யுனை டெட் குழுவிலிருந்து ஆறு வீரர்கள் விலகக்கூடும் என்று கூறப் படுகிறது.
புதிய வீரர்கள் வாங்குவது தொடர்பாகப் புதிய நிர்வாகியாகப் பொறுப்பேற்றிருக்கும் ஒலே குனார் சோல்சியாருக்கு ஆதரவு தரும் வகையில் இந்த ஏற்பாட்டை மான்செஸ்டர் யுனைடெட் எடுக்கக்கூடும்.
புதிய வீரர்களை வாங்க வேண்டும் என்றால் சில வீரர்களை வெளியாக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இந்நிலையில், ஆண்டர் ஹெரேரா, யுவான் மாட்டா, அலெக்சிஸ் சான்செஸ் ஆகி யோரின் எதிர்காலம் குறித்து  இன்னும் தெரியவில்லை. 
சான்செஸை இன்னொரு குழுவுக்கு விற்க சோல்சியார் முடிவு எடுக்கக்கூடும். ஆனால் அவரை வாங்குவது இலேசான காரியம் இல்லை. அவரை வாங்க விரும்பும் குழு பெரிய தொகையைச் செலுத்த வேண்டும். இதனால் பல குழுக்கள் தயங்கக்கூடும்.
இந்தப் பருவத்துடன் யுனை டெட் குழுவுடனான ஹெரேரா, மாட்டா ஆகியோரின் ஒப்பந்தங்கள் முடிகின்றன.
அவர்களுடன் யுனைடெட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  ஆனால் அவர்களது ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை.
இந்நிலையில், பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவில் இணைய ஹெரேரா இணக்கம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் இந்தத் தகலை ஹெரேராவோ பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் குழுவோ உறுதி செய்யவில்லை.
சான்செஸ் இதுவரை வெறும் ஐந்து ஆட்டங்களில்தான் களம் இறங்கியுள்ளார். 
ஆறு முறை மாற்று ஆட்டக் காரராக விளையாடியுள்ளார். சோல்சியார் நிர்வாகியாகப் பதவி ஏற்றதிலிருந்து ஒரு கோல் மட்டுமே போட்டிருக்கிறார்.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க கோல்காப்பாளர் டேவிட் டி கியாவைத் தக்கவைத்துக் கொள்ள யுனைடெட் முனைப் புடன் உள்ளது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon