புதுடெல்லி: இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி நேற்று முன்தினம் தோற்கடித்தது. டெல்லி அணியில் மூன்று மாற்றங்களாக அவேஷ் கான், ஹனுமா விஹாரி, ஹர்ஷல் பட்டேல் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக இஷாந்த் ஷர்மா, அக்ஷர் பட்டேல், ராகுல் திவேதியா சேர்க்கப்பட்டனர். ஹைதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அணித் தலைவர் வில்லியம்சன் காயமடைந்திருப்பதால் புவனேஷ் வர்குமார் அந்த அணியை வழிநடத்தினார். பூவா தலையாவில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசியது. இதன்படி முதலில் பந்தடித்த டெல்லி முதல் பந்தை பவுண்டரி அடித்து ஓட்டக் கணக்கை தொடங்கியது. ஆனால் அதையடுத்து ஹை தராபாத் அணியின் துல்லியமான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்கள் எடுத்தது. இது இப்பருவத்தில் டெல்லி அணியின் மிக மோசமான ஓட்ட எண்ணிக்கையாகும். அக்ஷர் பட்டேல் 23 ஓட்டங்களுடன் களத்தில் இருந் தார். ஹைதராபாத் தரப்பில் முகம்மது நபி, சித்தார்த் கவுல், புவனேஷ்வர்குமார் தலா 2 விக்கெட்டுகளும் ரஷித் கான், சந்தீப் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். எளிதில் எட்டக்கூடிய இலக்கை நோக்கி பந்தடித்த ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னரும் பேர்ஸ்டோவும் வலுவான தொடக்கம் உருவாக்கித் தந்தனர். அந்த அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட்டு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்பருவத்தில் ஹைதரா பாத் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். டெல்லி மூன்றாவது தோல்வியைத் தழுவியது.
டெல்லி அணியை வீழ்த்திய ஹைதராபாத்
2 mins read
-

