பூப்பந்து: காலிறுதியில் ஸ்ரீகாந்த்,  பி.வி. சிந்து அதிர்ச்சித் தோல்வி

கோலாலம்பூர்: மலேசியப் பொது விருது பூப்பந்து போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியா வின் ஸ்ரீகாந்த் கிதாம்பி தகுதி பெற்றுள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் அவர்  தாய்லாந்தின் கோசிட் பெட்பிரதாப்பை எதிர் கொண்டார். 
இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-11, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறி னார்.
இதற்கிடையே, பெண்களுக் கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங் கனை பி.வி. சிந்து,  தென் கொரியாவின் சுங் ஜி ஹியுனுடன் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத் தில் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சிந்து வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடந்ததோ வேறு. முதல் செட்டில் 11-9 என முன்னிலை வகித்த சிந்து இறுதியில் 14-16 எனப் பின்தங்கினார். 
அதன்பின் 18-21 என முதல் செட்டை இழந்தார்.  
இரண்டாவது செட்டில் பி.வி. சிந்துவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. 
தொடக்கத்திலேயே 5-0 எனும் கணக்கில் பின்தங்கி னார். அதன்பின் 5-10 எனப் பின்தங்கினார். இறுதியில் 7-21 என செட்டை இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon