மனந்தளராமல் போராடிய லிவர்பூலுக்கு வெற்றி

சௌத்ஹேம்டன்: சௌத்ஹேம்டன் குழுவுக்கு எதிரான ஆட்டம் முடிய ஏறத்தாழ பத்து நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது முகம்மது சாலா, ஜோர்டன் ஹெண்டர்சன் ஆகியோர் போட்ட கோல்கள் லிவர்பூலுக்கு வெற்றியைத் தந்தது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் லிவர்பூலும் சௌத்ஹேம்டனும் நேற்று அதிகாலை மோதின.
சொந்த மண்ணில் விளையாடிய சௌத்ஹேம்டன் ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் கோல் போட்டு முன்னிலை வகித்தது.
பெனால்டி எல்லைக்குள் இருந்த ஷேன் லோங்கைக் கவனிக்க லிவர்பூல் தற்காப்பு ஆட்டக்காரர்கள் தவறினர். 
பந்து அவரிடம் செல்ல அதை அவர் வலைக்குள் அனுப்பினார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத லிவர்பூல் ஆட்டக்காரர்கள் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்த போதிலும் அடுத்த சில நிமிடங்களிலேயே சுதாரித்துக் கொண்டு கோல் வேட்டையில் இறங்கினர். லிவர்பூலின் பல கோல் முயற்சிகளை சௌத் ஹேம்டன் தற்காப்பு ஆட்டக்காரர் களும் கோல்காப்பாளரும் முறியடித் தனர்.
ஆனால் லிவர்பூலின் விடாமுயற்சிக்கு ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் பலன் கிட்டியது. கெய்ட்டா தலையால் முட்டி அனுப்பிய பந்து வலைக்குள் சென்றது. ஆட்டத்தைச் சமன் செய்த உற்சாகத்தில் லிவர்பூல் வெற்றிக்குக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியது. இடைவேளையின்போது ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon