சுடச் சுடச் செய்திகள்

பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தில் சென்னை

சென்னை: பஞ்சாப் அணியை  வீழ்த்தி ஐபிஎல் பட்டியலில் மீண் டும் முதலிடத்தைப் பிடித்தது சென்னை. 
முதலில் சென்னை அணி யின் தொடக்க ஆட்டக்காரர் களாக ஷேன் வாட்சன், டு பிளஸ்ஸி களமிறங்கினர்.
வாட்சன் 26 ஓட்டங்களுக்கும் டு பிளஸ்ஸி 54 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா 20 ஓட்டத்தில் வெளியேறினார். 
இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு டன் பஞ்சாப் அணி களமிறங்கி யது.
கெயிலை 5 ஓட்டத்தில் ஆட்டமிழக்க செய்த ஹர்பஜன் சிங், மயங்க் அகர்வாலை ஓட்டம் எதுவும் எடுக்கவிடாமல் வெளி யேற்றினார். 
ராகுல் 55, சர்ஃபராஸ் கான் 67 ஓட்டங்களுக்கு வெளியேறி னர். இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. எனவே, சென்னை அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
சென்னை அணி சார்பில் ஹர்பஜன், குகலின் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon