முதல் போட்டியிலேயே பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆன மும்பை வீரர் ஜோசஃப்

மும்பை: சொந்த மண்ணில் பெரும் பாலும் வெற்றிகளைக் குவித்து வந்த ஹைதராபாத் அணியின் 6 விக்கெட்டுகளைப் பறித்து மண்ணைக் கவ்வ வைத்தார் மும் பையின் அறிமுக வீரர் அல்ஸாரி ஜோசஃப்.
முதலில் பந்தடித்த மும்பை அணி வீரர்கள் வரிசையாக சொதப்ப, பொல்லார்ட் மட்டும் 46 ஓட்டங்கள் சேர்த்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 136 ஓட்டங்கள் எடுத்தது.
137 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைத ராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித் தார் அல்ஸாரி ஜோசஃப்.
15 ஓட்டங்கள் சேர்த்திருந்த வார்னரை தனது முதல் பந்திலேயே வெளியேற்றினார் ஜோசஃப். ஒரு கட்டத்தில் 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 68 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது ஹைதராபாத்.
அணியைச் சரிவில் இருந்து மீட்க முயன்ற தீபக் ஹூடாவை 20 ஓட்டங்களில் வெளியேற்றிய தோடு மட்டுமல்லாமல் அவருக்குப் பின் ஆட வந்த ர‌ஷித் கான், சித்தார்த் கௌல் இருவரையும் ஓட்டம் ஏதுமின்றியும் புவனேஸ்வர் குமாரை 2 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்கச் செய்தார் ஜோசஃப்.
மற்ற வீரர்களும் ஒற்றை இலக் கத்தில் வெளியேற, 17.4 ஓவரில் 96 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது ஹைத ராபாத்.
மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த ஜோசஃப், ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு இன் னிங்சில் குறைந்த ஓட்டம் தந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சொகைல் தன்வீரின் 11 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
2008ல் சொகைலின் 6-14 என்பதே இதுவரை சாதனையாக இருந்தது.
அறிமுக ஆட்டம் என்ற வகை யில் பார்த்தாலும் 2017ல் ஆண்டரூ டையின் 5-17 என்ற சாதனையை யும் ஜோசப் தகர்த்துள்ளார்.
அதுபோல் முதல் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டைக் கைப்பற்றிய ஏழாவது பந்துவீச் சாளர் என்ற பெருமையையும் பெற் றுள்ளார்.
மேலும் ஐபிஎல் போட்டியின் முதல் ஓவரில் விக்கெட் கைப்பற் றியதோடு மட்டுமல்லாமல் ஓட்டம் எதுவும் விட்டுகொடுக்காத இரண் டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் இவர். இதற்கு முன் பேட் கம்மின்ஸ் இப்பெருமையை பெற்றுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!