கார்டியோலா: நான்கையும் வெல்ல சாத்தியமில்லை

கார்டியோலா: நான்கையும் வெல்ல சாத்தியமில்லை

2 mins read
92c48790-c615-40d5-a1fa-378ae0747b2c
பிரைட்டன் குழுவை 1-0 என வீழ்த்தி எஃப்ஏ கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி.  படம்: இபிஏ -

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு எஃப்ஏ கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோதும் ஒரே பருவத் தில் நான்கு முக்கிய கிண்ணங் களையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்று கூறி உள்ளார் அதன் நிர்வாகி பெப் கார்டியோலா. ஏற்கெனவே லீக் கிண்ணத்தை வென்றுள்ள சிட்டி, மற்ற மூன்று முக்கிய போட்டிகளிலும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. பிரிமியர் லீக் தொடரில் ஓர் ஆட்டம் குறைவாக விளையாடி உள்ள நிலையில், முதல் இடத்தில் உள்ள லிவர்பூலைவிட சிட்டி இரண்டு புள்ளிகளே குறைவாக உள்ளது. அதுபோல் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதி வரை முன் னேறியுள்ள சிட்டி வரும் புதன் கிழமை அதிகாலை டோட்டன் ஹமை எதிர்கொள்கிறது. இந்நிலையில் நேற்றைய எஃப்ஏ கிண்ண அரையிறுதி ஆட்ட வெற் றிக்குப் பிறகு பேசிய கார்டியோலா, "இதுவரை யாரும் நான்கு கிண் ணங்களையும் வென்றதில்லை. அப்படியிருக்க எங்களால் மட்டும் எப்படி முடியும். "அனைத்தையும் வெல்வது என்பது பெரும்பாலும் சாத்தியமற் றது என்பதே உண்மை. "தொடர்ந்து நீடிப்பதே அரிதான ஒன்று. இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார். நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் பிரைட்டனை 1-0 என வீழ்த்தினாலும் சிட்டியின் ஆட்டம் சிறப்பாக இல்லையென்றே சொல்ல வேண்டும். பல கோல் போடும் வாய்ப்புகளை சிட்டி தவறவிட்டாலும் பிரைட்ட னின் கிளென் மர்ரேவின் கோல் முயற்சியை லபோர்ட்டே தடுத்து விட, சிட்டியின் வெற்றி பறிபோகா மல் தப்பியது. முன்னதாக நான்காவது நிமி டத்தில் கேப்ரியல் ஜேசுஸ் போட்ட ஒரு கோல் சிட்டியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது. எஃப்ஏ கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.