ஆக மோசமான காற்பந்துக் 'கோட்டை'

ஆக மோசமான காற்பந்துக் 'கோட்டை'

1 mins read
ceab3bad-59aa-4004-9d8c-04c57d422afa
-

இன்னும் எட்டு ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே இந்தப் பருவத்தில் பிரெஞ்சு 'லீக் 1' காற்பந்துப் பட்டத்தை பிஎஸ்ஜி குழு கைப்பற்ற அருமையான வாய்ப்பு கிட்டியது. ஆயினும், கோலடிக்க கிடைத்த மிக மிக எளிமையான வாய்ப்பை எரிக் மேக்சிம் சூப்போ மோட்டிங் (நீலச் சீருடை) கோட்டைவிட்டதால் ஸ்ட்ராஸ்பர்க் குழுவுடன் பிஎஸ்ஜி மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனானது. பந்து கோல் கோட்டிற்குச் சில அங்குலமே தள்ளி இருந்தபோதும் மோட்டிங் கோலடிக்கத் தவறினார். இது, காற்பந்து வரலாற்றிலேயே ஆக மோசமாகத் தவறவிட்ட கோல் வாய்ப்பாக கருதப் படுகிறது. "பந்தை நான் காலால் தட்டிவிட்டபோதும் அது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பிவிட்டது. 'ஆஃப் சைட்' நிலையில் இருக்கிறேனோ என்று நான் சஞ்சலபட்டு விட்டேன். எல்லாமே வேகமாக முடிந்துவிட்டது. இருந்தாலும் வாய்ப்பைத் தவறவிட்டதை எண்ணி வெட்கப்படுகிறேன். அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்," என்றார் கெமரூன் நாட்டவரான சூப்போ மோட்டிங். படம்: ஏஎஃப்பி