புதுடெல்லி: இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதியில் தோல்வியைத் தழுவியது. இதனை அடுத்து, இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் ஹரேந்திர சிங் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு புதிய பயிற்றுவிப்பாளர் நியமனம் செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 54 வயது கிரஹாம் ரீட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 130 அனைத்துலக ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி இருக்கும் கிரஹாம் ரீட் 1992ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஹாக்கி அணியின் பயிற்றுவிப்பாளராக கிரஹாம் நியமனம்
1 mins read

