மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய செல்சி

மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய செல்சி

2 mins read
b679d817-a993-4b6a-bc4b-8bdc527228eb
பந்தை வலை நோக்கி அனுப்பும் செல்சியின் ஒலிவியே ஜிரூ (இடது). வெஸ்ட் ஹேம் குழுவின் கோல் காப்பாளரைப் பந்து கடந்து சென்ற போதும் அது இலக்கை அடைய தவறியது. இருப்பினும், ஹசார்ட் போட்ட இரண்டு கோல்களால் செல்சி வெற்றி பெற்றது. படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் செல்சி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற காற்பந்து ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் குழுவை 2=0 எனும் கோல் கணக்கில் செல்சி வீழ்த்தியது. செல்சியின் இரண்டு கோல்களையும் ஈடன் ஹசார்ட் போட்டார். ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் பந்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு முன்னேறிய ஹசார்ட், மூன்று வெஸ்ட் ஹேம் ஆட்டக்காரர்களைக் கடந்து சென்று பந்தை வலைக்குள் அனுப்பினார். இந்த அபார கோல் வெஸ்ட் ஹேம் ஆட்டக்காரர்களை ஆட்டங்காண வைத்தது. ஆட்டம் முடிய வினாடிகள் மட்டும் எஞ்சியிருந்தபோது செல்சி யின் இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தார் ஹசார்ட். செல்சிக்கு எதிராக கோல் போட முடியாமல் வெஸ்ட் ஹேம் தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே, செல்சி யிலிருந்து விலக ஹசார்ட் முடிவெடுத்தால் அவரது முடிவை மதிக்க வேண்டும் என்று செல்சியின் நிர்வாகி மொரிசியோ சாரி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்குப் பிறகு செல்சியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க பெல்ஜியத்தின் நட்சத்திர வீரரான ஹசார்ட் மறுத்துவிட்டார். அவர் ஸ்பானிய லீக் ஜாம்பவான் ரியால் மட்ரிட்டில் இணையக்கூடும் என்று பேசப்படுகிறது. "புதிய அனுபவத்தைப் பெற ஹசார்ட் விரும்பினால் அவரை செல்சியில் தக்கவைத்துக் கொள்வது சிரமம். "வெஸ்ட் ஹேம் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மிக அருமையாக விளையாடினார். அவர் சிறப்பாக விளையாடும்போது நாங்கள் எளிதில் வெற்றி பெறு கிறோம். ஹசார்ட்டை செல்சியில் வைத்துக்கொள்ள குழுவின் நிர்வாகம் விரும்புகிறது. "நாங்கள் மேம்பட முயன்று வருகிறோம். இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் சிறந்த குழுக் களுக்கான பட்டியலில் இடம்பெற நாங்கள் விழைகிறோம். இருப் பினும், ஹசார்ட்டின் விருப்பத்தை நாங்கள் மதிக்க வேண்டும்.