மருத்துவமனைக்குச் சென்று பெலேவைப் பார்த்த காற்பந்து நட்சத்திரம் நெய்மார்

மருத்துவமனைக்குச் சென்று பெலேவைப் பார்த்த காற்பந்து நட்சத்திரம் நெய்மார்

1 mins read
6dd24676-6125-465a-8478-375d29948f63
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெலேவுடன் (வலது) பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார். படம்: இன்ஸ்டகிராம் - நெய்மார் ஜூனியர் -

பாரிஸ்: பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் உள்ள மருத்துமவனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் காற்பந்து சகாப்தம் பெலேயை நேரில் சென்று சந்தித்தார் பிரேசில் காற்பந்து நட்சத்திரம் நெய்மார். பெலேவுடன் தாம் இருக்கும் புகைப்படத்தை நெய்மார் இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். பெலே எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. சிறுநீர்க் குழாய் தொற்று காரணமாக 78 வயது பெலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.