இஸ்லாமாபாத்: உலகக் கிண் ணப் போட்டித் தொடர் இங்கிலாந் தில் மே 30ஆம் தேதி தொடங்கு கிறது. இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில், வீரர்களின் உடற்தகுதிக்கு ஒவ்வோர் அணி யும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஆனால், பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வரு கிறது. குறிப்பாக 50 ஓவர்கள் போட்டியில் கடந்த 2017ஆம் ஆண்டு வெற்றியாளர் கிண்ணத் திற்குப்பின் பாகிஸ்தான் அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. இந் நிலையில், முன்னாள் வீரரும் அணித்தலைவர் வாசிம் அக்ரம் அளித்த பேட்டி ஒன்றில், "பாகிஸ்தான் வீரர்கள் அனை வரும் ருசியாக பிரியாணி சாப்பிட் டால் மட்டும் போதாது", என்று கடுமையாகச் சாடியுள்ளார். உலகக்கிண்ணப் போட்டிக் கான அணியைப் பாகிஸ்தான் 18ஆம் இந்தியா 15ஆம் தேதியும் அறிவிக்கின்றன.
வாசிம்: பிரியாணி சாப்பிட்டால் மட்டும் போதாது
1 mins read

