சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொது விருது அனைத்துலக பூப்பந்தாட் டப் போட்டி சிங்கப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் நடந்த தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந் தியாவின் காஷ்யப், முக்தா ஆகி யோர் வெற்றி பெற்று பிரதான சுற்றை எட்டினர். நேற்று இந்திய நட்சத்திர மங்கைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து களம் இறங் கினர். சிந்து தனது முதல் சுற்றில் இந்தோனீசியாவின் லையனி அலெஸாண்ட்ரா மைனகியை 21-9, 21-9 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து இரண்டாவது சுற் றுக்கு முன்னேறியுள்ளார். சாய்னா நேவால், இந்தோனீ சியாவின் சுசான்டோவுடன் பொருதி 21-16, 21-11 என்ற புள் ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்தும் முதல் சுற்றில் நேற்று விளையாடினார்.
சிங்கப்பூர் பொதுவிருது போட்டி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினர் சாய்னா நேவால், பி.வி. சிந்து
1 mins read
பூப்பந்தாட்ட வீரர்கள் இடமிருந்து ஜப்பானின் கென்ட்டோ மோமோட்டோ, இந்தோனீசியாவின் ஜோனாத்தன் கிறிஸ்டி, இந்தியா வின் புர்சர்லா வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிடம்பி. படம்: ஏஎஃப்பி -

