சுடச் சுடச் செய்திகள்

புதிய அரங்கில் சிட்டியை வீழ்த்தியது ஸ்பர்ஸ் குழு

லண்டன்: நேற்று அதிகாலை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழுவை டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு 1-0 என வீழ்த்திய அடுத்த சுற்றுப் போட்டியில் சாதக மான நிலையை தனக்கு ஏற் படுத்திக்கொண்டது.
புதிய அரங்கில் ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு இடையே கள மிறங்கிய ஸ்பர்ஸ் குழு தனது முக்கிய தாக்குதல் ஆட்டக்காரரான ஹேரி கேனை காயம் காரணமாக பாதியில் இழந்தபோதிலும் சளைக் காது விளையாடி சிட்டி குழு வீழ்த் தியது.
ஆட்டம் முடிய 12 நிமிடங்கள் இருந்த நிலையில், ஸ்பர்ஸின் சோன் ஹியுங் மின், சிட்டி கோல் எல்லையில் அதன் தற்காப்பு அரணை மிக லாவகமாக தகர்த்து சிட்டிக்கு எதிராக கோல் போட்டார்.
முன்னதாக, சிட்டியின் ரஹீம் ஸ்டெர்லிங் உதைத்த பந்தை தமது கையால் டேனி ரோஸ் என்ற ஸ்பார்ஸின் தற்காப்பு ஆட்டக்காரர் தடுத்ததாகக் கூறி சிட்டிக்கு பொனல்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், அந்த வாய்ப்பை வீணடித்தார் மான்செஸ்டர் சிட்டி யின் செர்ஜியோ அகுவேரோ.
நேற்றைய ஆட்டத்தில் சிட்டி அணி தனது முழுத் திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு விளையாடவில்லை என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
 எனவே இனி அடுத்த சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி தனக்கு இந்தப் போட்டியில் ஏற் பட்டுள்ள தோல்வியை ஈடுகட்டும் அளவுக்கு வென்றால்தான் அது தனது பிரிமியர் லீக் விருது, எஃப்ஏ கிண்ணம், சாம்பியன்ஸ் லீக், லீக் கிண்ண விருது என்ற நான்கு விருதுகளையும் வெல்லும் கனவில் தொடர்ந்து மிதந்துவர முடியும். சிட்டிக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பிலிருந்து தப்பிய ஸ்பர்ஸ் அணிக்கு ஹேரி கேன் காயமும் மேலும் ஒரு பின்னடைவாக அமைந்தபோதிலும் அது மான்செஸ்டர் சிட்டி குழுவை தனது புதிய அரங்கில் பெரிய எதிர்பார்ப்புடன் வந்த தனது ரசிகர்களுக்கு காற்பந்து விருந் தளித்ததாக பிபிசி செய்தி கூறுகிறது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon