சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி காலிறுதி சுற்று: மேன்யூவிற்கு பின்னடைவு

மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் முதல் சுற்று காலிறுதி ஆட்டம் ஒன்றில் நேற்று அதிகாலை மான்செஸ்டர் யுனைடெட்டும் பார்சிலோனாவும் மோதின. யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணி பின்னடைவைச் சந்தித்தது.
நேற்றைய ஆட்டத்தில் பார்சி லோனாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைக் கண்ட யுனைடெட் குழு, இதற்கு முந்தைய சுற்றில் பாரிஸ் செயிண்ட் ஜெர் மைன் (பிஎஸ்ஜி அணி) குழுவை இரண்டாவது சுற்றில் வெற்றி கொண்டு காலிறுதிக்கு முன்னேறி யதுபோல் மீண்டும் அடுத்த சுற்று ஆட்டத்தில் எதிர்பார்ப்புகளை மீறி ஆடினால் மட்டுமே அரையிறு திக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், யுனைடெட்டை வென்ற பார்சிலோனாவும் அவ் வளவு சிறப்பாக விளையாடவில்லை என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. யுனைடெட்டின் ஆட்டத்தில் முயற்சி இருந்த அளவுக்கு கோல் வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய தரமான விளை யாட்டு இல்லை என்றும் கூறப்படு கிறது. இதில் டியேகோ டாலோட் என்ற வீரர் ஒரு சந்தர்ப்பத்தில் பந்தை பார்சிலோனா கோல்காப் பாளரை நோக்கி தலையால் முட்டியதைத் தவிர யுனைடெட் அணிக்கு சொல்லிக் கொள்ளும்படியான கோல் போடும் வாய்ப்புகள் எதுவும் நேற்றைய ஆட்டத்தில் கிட்டவில்லை என காற்பந்து விமர்சகர் கள் கூறுகின் றனர். அதேசமயம் பார்சிலோனா அணி தனது நட்சத்திர வீரர் களான கொட்டின்யோ, மெஸ்ஸி, சுவாரெஸ் போன்றவர்கள் மூலம் யுனைடெட் அணிக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாகக் கூறப்படு கிறது. எனினும், யுனைடெட்டின் இளம் மத்திய திடல் வீரரான ஸ்காட் மெக்டோ மினி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகனாக வலம் வந்தார் என்று பிபிசி தகவல் தெரிவிக்கிறது.
இனி, பார்சிலோனாவின்
நூ காம்ப் மைதானத்தில் பிஎஸ்ஜி அணிக்கு கொடுத்த அதே அதிர்ச் சியை கொடுக்க முடியுமா எனப் பார்க்க வேண்டும்.
மற்றோர் ஆட்டத்தில் இத்தாலி யின் யுவென்டஸ் குழுவும் ஹாலந் தின் அயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவும் 1-1 என சமநிலை கண் டன. இதில் முன்னாள் ரியால் மட்ரிட் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ யுவென்டஸ் சார்பாக கோல் போட்டது சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் அவர் போட்ட 125 கோலானது. அயக்ஸ் ஆம்ஸ்டர் டாம் குழு சார்பாக டேவிட் நிரெஸ் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங் கியவுடனேயே போட்டது குறிப் பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!