மலேசிய ஹாக்கி தொடரைக் கைப்பற்றினர் இந்திய பெண்கள்

மலேசிய ஹாக்கி தொடரைக் கைப்பற்றினர் இந்திய பெண்கள்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு எதிரான 4வது ஹாக்கி போட்டி யில் லால்ரிம்சியாமி ஒரு கோல டித்து கைகொடுக்க இந்திய பெண்கள் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது. மலேசியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, 3வது போட்டியை 'டிரா' செய்தது. கோலாலம்பூரில் 4வது போட்டி நடந்தது. முதல் 30 நிமிட முடிவில் போட்டி 0-0 என சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் இந் திய அணிக்கு 55வது நிமிடத் தில் லால்ரிம்சியாமி ஒரு 'பீல்டு' கோலடித்து கை கொடுத்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக் கில் வெற்றி பெற்றது.