சுடச் சுடச் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் குட்டித்தூக்கம் போட்ட டோனி

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 23ஆம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடை பெற்று வருகிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கும். போட்டி முடிவடைய 11.30 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால் ரசிகர் கள் வீடு திரும்ப மிகவும் சிரமப் படுகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமே சிரமப்படுவ தில்லை. அணியின் வீரர்களும் சிரமப்படுகின்றனர். அவர்கள் போட்டியை முடித்துக்கொண்டு அடுத்த போட்டிக்காக உடனடியாக விமானம் மூலம் அடுத்த மாநிலத் திற்குப் பறக்க வேண்டியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 6ஆம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை யும், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் எதிர்கொண் டது. இந்த இரண்டு போட்டிகளும் சேப்பாக்கத்தில் நடைபெற்றன. நாளை ராஜஸ்தானை ஜெய்ப்பூரில் எதிர்கொள்கிறது.
நேற்றைய போட்டி நள்ளிரவு 12 மணியளவில் முடிந்ததும் வீரர்கள் உடனே ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென் றனர். விடியற்காலையில்தான் விமானம் என்பதால் சென்னை விமான நிலையத்தில் சென்னை அணித் தலைவர் எம்எஸ் டோனி தரையிலேயே ஒரு குட்டித்தூக்கம் போட்டார்.அவர் தூங்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு “ஐபிஎல் ஆட்டங்களின் நேரத்தால் அதிகாலையில் விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்தால் இப்படித் தான் நிகழும்,” பதிவிட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon