ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை

ஜெய்ப்பூர்: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் சொந்த விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் ஹர்பஜன் சிங், ஸ்காட் குஜ்ஜெலின் ஆகியோர் களமிறங்கவில்லை.
அவர்களுக்குப் பதிலாக மிட்செல் சான்ட்னெர், ஷர்துல் தாகூர் ஆகியோர் விளையாடினர். ராஜஸ்தான் அணியின் 17 வயது ரியான் பராக் அறிமுக வீரராகக் களமிறங்கினார். 
பூவா தலையாவில் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பந்தடித்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக அணித் தலைவர் ரகானே, ஜோஸ் பட்லர் ஆகியோர் களம் இறங்கினார்கள். 
முதல் ஓவரில் ஜோஸ் பட்லர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரும், இரண்டாவது ஓவரில் ரகானே தொடர்ந்து 2 பவுண்டரிகளும் விளாசி அமர்க்களமாக ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
மூன்றாவது ஓவரில் தீபக் சாஹர் பந்துவீச்சில் ரகானேவுக்கு எதிராக எல்.பி.டபிள்யூ. கேட்டு நடுவரிடம் சென்னை முறை யிட்டது. ஆனால் ரகானேயை நடுவர் வெளியேற்ற மறுத்ததைத் தொடர்ந்து சென்னை அணித் தலைவர் டோனி டி.ஆர்.எஸ். முறையில் நடுவரின் முடிவுக்கு எதிராக முறையீடு செய்தார். 
இதனை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர் ரகானே ஆட்டமிழந்ததாக அறிவித்தார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். 
ராகுல் திரிபாதி (10 ஓட்டங்கள்) மற்றும் ஸ்டீவன் ஸ்மித் (15 ஓட்டங்கள்) ரவீந்திர ஜடேஜாவின் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 13வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்  இழப்புக்கு 151 ஓட்டங் கள் எடுத்தது. 
பின்னர் 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் சுரேஷ் ரெய்னா 4 ஓட்டங்களும் பாப் டுபிளிஸ்சிஸ் 7 ஓட்டங்களும் கேதர் ஜாதவ் 1 ஓட்டமும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon