‘செல்சியைக் கண்டு அஞ்சவில்லை’

லண்டன்: ஐந்தாண்டுகளுக்குமுன் செல்சி குழுவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனது லிவர்பூல் குழுவின் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டக் கனவைச் சிதறடித்தது. இறுதியில், மான் செஸ்டர் சிட்டி குழு லிவர்பூலைவிட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்தப் பருவத்திலும் அதே போன்றதொரு நிலையில் இருக்கும் லிவர்பூல், இன்று நடக்கவுள்ள மிக முக்கியமான ஆட்டத்தில் தனது சொந்த ஆன்ஃபீல்ட் விளை யாட்டரங்கில் செல்சியை எதிர் கொள்கிறது. மான்செஸ்டர் சிட்டி யைவிட ஓர் ஆட்டம் கூடுதலாக ஆடியுள்ள லிவர்பூல், அக்குழுவை விட இரு புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
இன்றிரவு செல்சியை வீழ்த்தும் பட்சத்தில் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரிமியர் லீக் பட்டத்தை வெல்லத் துடிக்கும் லிவர்பூலின் கனவு நனவாகும் வாய்ப்பு அதிக மாகும்.
இந்த நிலையில், 2014ல் செல்சியிடம் தோற்றதை நினைத்து இப்போது கவலைப்படவில்லை என்கிறார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.
"ஐந்தாண்டுகளுக்குமுன் கிட் டிய தோல்வியை நினைத்துக் கலங்குவதால் ஒன்றும் நேர்ந்து விடப்போவது இல்லை. இன்றைய ஆட்டம், முழுக்க முழுக்க வேறு ஒரு கதை. இன்று எப்படி ஆடு கிறோம் என்பதைப் பொறுத்தே முடிவு அமையும். பல ஆண்டு களுக்குமுன் நடந்தது குறித்து எங்கள் வீரர்களிடம் யாரும் எதுவும் பேசவேண்டாம். எங்களது வரலாற்றை நாங்களே எழுத விரும்புகிறோம்," என்றார் அவர்.
கிளோப் நம்பிக்கையுடன் இருந் தாலும் கடந்த காலப் புள்ளி விவரங்கள் லிவர்பூலுக்குச் சாதக மாக இல்லை. ஆன்ஃபீல்ட் அரங் கில் செல்சியுடன் மோதிய கடைசி எட்டு ஆட்டங்களில் ஒருமுறை கூட லிவர்பூல் வென்றது இல்லை. இந்தப் பருவத்தில் அங்கு நடந்த லீக் கிண்ண ஆட்டத்தில், கடைசி நேரத்தில் ஈடன் ஹசார்ட் அடித்த கோலால் செல்சி 2-1 என்ற கணக்கில் லிவர்பூலைச் சாய்த்தது.
ஆதலால், என்னதான் நம்பிக் கையுடன் இருந்தாலும் ஹசார்டைக் கண்டு கிளோப்புக்குச் சற்று பயம் இருக்கவே செய்கிறது.
"ஹசார்ட் நல்ல ஆட்டத்திற னுடன் காணப்படுகிறார். அதிர்ஷ் டக்காற்றும் அவர் பக்கம் வீசும் பட்சத்தில், அந்நாளில் அவரே உலகின் சிறந்த ஆட்டக்காரராக மிளிர்வார்," என்றார் கிளோப்.
அதே நேரத்தில், இம்முறையும் லிவர்பூலின் பட்டக் கனவை கானல் நீராக்கும் முனைப்புடன் செல்சி இருக்கிறது.
பட்டம் வெல்ல வாய்ப்பில்லை என்றபோதும் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முடித்து சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெற வேண்டும் என்பதே செல்சியின் இலக்காக இருக்கிறது. இப்போது செல்சி 66 புள்ளிகளுடன் மூன்றா மிடத்தில் உள்ளது (நேற்றிரவு நடந்த டோட்டன்ஹம்-ஹடர்ஸ் ஃபீல்ட் ஆட்டத்திற்கு முந்தைய நிலவரம்).
லிவர்பூல்-செல்சி ஆட்டத்திற் குச் சில மணி நேரம் முன்னதாக மான்செஸ்டர் சிட்டி-கிரிஸ்டல் பேலஸ் ஆட்டம் இடம்பெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் சிட்டி வெல்ல முடியாமல் போனாலும் லிவர்பூலின் முதல்நிலை தொடரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!