தவான் ஓட்டக் குவிப்பால் தேர்வாளர்கள் நிம்மதி

கோல்கத்தா: தொடக்க ஆட்டக் காரர் ‌ஷிகர் தவான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 93 ஓட்டங்களை விளாச, கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பந்தடித்த கோல்கத்தா அணி 20 ஓவர்களில் ஏழு விக் கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களை எடுத்தது. ‌ஷுப்மன் கில் 65 ஓட் டங்களையும் ஆண்ட்ரே ரசல் 45 ஓட்டங்களையும் விளாசினர்.
அடுத்து பந்தடித்த டெல்லி அணி ஏழு பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே இலக்கை எட்டியது.
டி20 போட்டிகளில் தமது முதல் சதத்தை அடிக்க அருமையான வாய்ப்பு கிட்டியபோதும் கடைசி நேரத்தில் கோலின் இங்ராம் சிக்சர் அடித்ததால் அவ்வாய்ப்பு பறிபோனது. இதனால் 97 ஓட்டங்களுடன் தவான் மன நிறைவு கண்டு திடலைவிட்டு வெளியேற வேண்டியதாகிவிட்டது.
ஆனாலும், அது பற்றி தவான் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சத வாய்ப்பு நழுவினாலும் அணி யின் வெற்றியே முக்கியம் என்றார் இவர்.
உலகக் கிண்ணப் போட்டி களுக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்படவுள்ள நிலை யில், தவான் ஓட்டங்களைக் குவித்து நல்ல ஆட்டத்திறனுக்குத் திரும்பியிருப்பது இந்திய அணித் தேர்வாளர்களுக்கு நிம்மதி அளித் திருக்கும். ஏனெனில் முந்தைய ஆட்டங்களில் இவர் சொல்லிக் கொள்ளும்படியாக ஓட்டம் குவிக்க வில்லை.
அதேபோல, 31 பந்துகளில் 46 ஓட்டங்களை விளாசிய விக்கெட் காப்பாளரும் அதிரடி ஆட்டக்கார ருமான ரிஷப் பன்ட்டும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்திக்கொண் டுள்ளார்.
டெல்லி அணியிடம் தோற்ற போதும் கோல்கத்தா அணியின் இரண்டாமிடம் பறிபோகவில்லை, மாறாக, டெல்லி அணி நான்காம் இடத்திற்கு முன்னேறியது (நேற் றைய ஆட்டங்களுக்கு முந்தைய நிலவரம்).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!