திக்குமுக்காடிய யுனைடெட் பெனால்டியில் கரை சேர்ந்தது

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஒன்றில் நேற்று முன்தினம் வெஸ்ட் ஹேம் குழுவுடன் மோதிய மான்செஸ்டர் யுனைடெட் குழு திக்குமுக்காடியது.
எனினும், கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளை அதன் நட்சத்திர வீரர் பால் போக்பா கோல்களாக மாற்ற அது வெஸ்ட் ஹேம் குழுவை 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது.
ஆனால் இந்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளும் தவறாக வழங்கப்பட்டன என்றும் ஆட்டத் தில் காணொளி தொழில்நுட்பம் மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தால் தங்கள் அணி வென்றிருக்கும் என்று வெஸ்ட் ஹேம் குழுவின் நிர்வாகி மேனுவல் பெலகிரினி கூறினார்.
இதன் தொடர்பில் விளக்கிய அவர், தமது குழுவின் ஃபெலிப்பி ஆண்டர்சன் போட்ட கோல் 'ஆஃப் சைட்' என தவறாகக் கணிக்கப் பட்டதாகக் கூறுகிறார்.
அத்துடன், மான்செஸ்டர் யுனைடெட்டின் யுவான் மாட்டா வெஸ்ட் ஹேம் அணியின் ராபர்ட் ஸ்னோட்கிராஸ் என்பவரால் தடுக்கிவிடப்பட்டதாகக் கூறி நடு வர் முதலில் வழங்கிய பெனால் டியில் தமது வீரர் தவறு செய்ய வில்லை என்றும் இவர் வாதிடு கிறார்.
மேலும், இரண்டாவதாக யுனை டெட்டின் மார்சியாலை தடுக்கி விட்டதாக வழங்கப்பட்ட பெனால்டி யில் அவர், மார்சியால், 'ஆஃப் சைட்' நிலையில் இருந்ததாக இவர் கூறுவதாகவும் பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
"நான் நடுவருக்கு எதிராக புகார் கூறவில்லை, ஏனெனில் அவை பெரிய தவறுகள் என்று கூற முடியாது. அந்தத் தவறுகளை கண்டுபிடிப்பது சிரமமான ஒன்று.
"ஆனால், காணொளி தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கு மானால், ஆட்ட முடிவு வேறு வித மாக திசைமாறி இருக்கும். அந்தத் தொழில்நுட்பம் பெனால்டி உண் மையை வெளிப்படுத்தி இருக்கும். எங்கள் அணி 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றிருக் கும்," என அவர் கூறியதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.
இது இப்படியிருக்க, வெஸ்ட் ஹேம் குழுவுக்காக ஆண்டர்சன் ஆட்டத்தின் 49ஆம் நிமிடத்தில் ஒரு ஆறுதல் கோல் போட்டது.
நேற்றைய ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் மான்செஸ்டர் யுனை டெட்டின் விதியை அதன் கோல் காப்பாளர் டி கியா காப்பாற்றினார்.
வெஸ்ட் ஹேமின் ஆண் டோனியோ என்ற ஆட்டக்காரர் இருமுறை கோல் போடக்கூடிய வாய்ப்புகளை இழந்தார். முதலில், அவர் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
அடுத்த முறை தலையால் முட்டிய பந்தை டி கியா அற்புதமாக தமது கையால் கோல் கம்பத்துக்கு வெளியே தள்ளினார்.
இந்த ஆட்டம் பற்றிக் கருத் துரைத்த யுனைடெட் நிர்வாகி சோல்சியார், "அவர்கள் எங்களை விட நன்றாக விளையாடினர், அதை நான் நியாயமாகவே ஒப்புக் கொள்வேன். அதை எவரும் மறுக்க முடியாது," என்று வெஸ்ட் ஹேம் குறித்துக் கூறினார்.
எனினும், "காற்பந்தில் சில சந்தர்ப்பங்களில் எதிர்பார்த்ததற் கும் மேலாக கிடைத்துவிடுகிறது," என்று தமது அணியின் அதிர்ஷ் டம் குறித்துக் கூறினார்.
நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்து யுனைடெட் அணி தரவரிசைப் பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியது குறிப் பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!