ஷங்காய்: ஆயிரமாவது ஃபார் முலா1 கார் பந்தயத்தில் லூவிஸ் ஹேமில்டன் வாகைசூடினார். தமது மெர்சிடிஸ் சகாவான வால்ட்டேரி பொட்டாசை அவர் வீழ்த்தினார். சீன கிராண்ட் ப்ரீ பந்தயச் சுற்றின் இரண்டாவது தடத் திலிருந்து போட்டியைத் தொடங் கிய ஹேமில்டனின் வெற்றியின் குறுக்கே பெரிய தடங்கல்கள் ஏதும் இல்லாததால் சுலபமாக முன்னேறிச் சென்றார். இறுதியில் பொட்டாசைக் காட்டிலும் 6.5 விநாடிகள் முந்திச் சென்று பட்டத்தைத் தட்டிச் சென்றார் ஹேமில்டன். செபாஸ்டியன் வெட்டல் மூன் றாவதாக வந்தார். ரெட் புல் அணியின் டச்சு ஓட்டுநரான மேக்ஸ் வெர்ஸ்டாப் பன் நான்காவதாகவும் ஃபெராரி யின் புதுமுகம் சார்ல்ஸ் லெக் லெர்க் ஐந்தாவதாகவும் வந்தனர். இது ஹேமில்டனின் ஆறா வது ஷங்காய் வெற்றி என்பதோடு இந்தப் பருவத்தில் அவர் பெற்றி ருக்கும் இரண்டாவது வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கெனவே 2008, 2014, 2015, 2017 என நான்கு முறை உலக எஃப்1 வெற்றியாளர் பட் டத்தை வென்றுள்ளார்.
ஆயிரமாவது கார் பந்தயத்தில் ஹேமில்டன் நாயகன்
1 mins read

