டோனிக்கு தடை: சேவாக் கருத்துக்கு வான் வரவேற்பு

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடை பெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய 4வது பந்தை சான்ட்னர் எதிர்கொண்டார்.
இந்த பந்து பந்தடிப்பாளரின் இடுப்புக்கு மேல் சென்றது என்று நேர் நடுவர் 'நோ பால்' என கூற 'ஸ்குவேர் லெக்' நடுவர் 'நோ பால்' இல்லை என்றார். இது பற்றிய குழப்பம் அதிகரிக்க, எல்லைக்கோட் டருகே நின்றுகொண்டிருந்த டோனி ஆவேசமாக திடலுக்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் புரிந்தார்.
இதனையடுத்து அவருக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம். இது போதாது என்று பிஷன் பேடி சாட, வீரேந்திர சேவாக்கும் டோனிக்கு எதி ராகக் கூறினார்.
நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ததற்காக டோனியை 2-3 போட்டிகளுக்கு தடைசெய்ய வேண்டுமென்று அவர் காட்ட மாகத் தெரிவித்தார்.
அதனை வரவேற்றுள்ள இங்கிலாந்து அணியின் முன் னாள் தலைவர் மைக்கல் வான், "டோனியை இரு போட்டி களுக்குத் தடை செய்யவேண்டு மென்று சேவாக் கூறியுள்ளார். நானும் இதற்குமேல் கேட்க வில்லை. டோனி செய்த காரியம் ஏற்க முடியாதது என்பதை பிற வீரர்களுக்கும் செய்தியாகத் தெரிவிக்க வேண்டுமெனில் அவருக்கு இரண்டு போட்டி களுக்குத் தடை விதித்துத்தான் இருக்க வேண்டும்," என்று தன் டுவீட்டில் பதிவிட்டுள்ளார்.
இதனை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!