தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு

மும்பை: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி களுக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் என தமிழக வீரர்கள் இருவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் மே மாதம் 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை இங்கிலாந்தில் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் பத்து அணிகள் கிண்ணத்திற் காக போட்டியிடுகின்றன. ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதவேண்டும். முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும்.
அணிகள் விவரம் இம்மாதம் 23ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) கெடு விதித்துள்ளது.
அந்த வகையில், உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப் பட்டது.
விராத் கோஹ்லியைத் தலைவராகக் கொண்ட இந்திய அணியில் நான்காவது வீரராக யார் இடம்பெறுவார் என்பதும் 2வது விக்கெட்காப்பாளர் யார் என்பதும் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில், அவ்விரு இடங்களையும் தமிழக வீரர்கள் தட்டிச் சென்றனர்.
ஒட்டுமொத்தத்தில், ஐந்து பந்தடிப்பாளர் கள், இரண்டு விக்கெட் காப்பாளர்கள், மூன்று ஆல்ரவுண்டர்கள், மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆகியோரைக் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் அணிப் பட்டியலை அறிவித்த தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ். கே.பிரசாத், "சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு நான்காமிடத்தில் சில வீரர்களைச் சோதித்துப் பார்த்தோம். அம்பதி ராயுடுவுக்கு கூடுதலான வாய்ப்புகள் தரப்பட்டன. இருந்தாலும், பந்த டிப்பு, பந்துவீச்சு, களக்காப்பு என முத்துறை களிலும் விஜய் சங்கர் சிறப்பாகச் செயல் படுவார் என நம்புகிறோம்," என்றார்.
இளம் விக்கெட் காப்பாளரான ரிஷப் பன்டைவிட கார்த்திக் விக்கெட் காப்பில் மேம்பட்டவர் என்றும் இறுதி ஓவர்களில், நெருக்கடியான தருணங்களில் சிறப்பாக ஆடக்கூடியவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் பெயரும் பரிசீலிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் ஆடும் விதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் தெளிவுபடுத் தினார்.
அணி அறிவிக்கப்பட்டபோதும் மே 23ஆம் தேதிக்குள் ஐசிசி அனுமதி பெறா மலேயே அணியில் மாற்றம் செய்ய முடியும்.
இந்திய அணி விவரம்: விராத் கோஹ்லி (அணித்தலைவர்), ரோகித் சர்மா, ‌ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விஜய் சங்கர், கேதார் ஜாதவ், டோனி, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சகல், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகம்மது ஷமி, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!