சுடச் சுடச் செய்திகள்

ஆன்ஃபீல்டை அதிரவைத்த சாலா

லிவர்பூல்: நட்சத்திர ஆட்டக்காரர் முகம்மது சாலா அடித்த அற்புத மான கோலால் லிவர்பூல் காற் பந்துக் குழு 2-0 என்ற கோல் கணக்கில் செல்சியை வீழ்த்தியது. இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி யைவிட லிவர்பூல் இரு புள்ளிகள் கூடுதலாகப் பெற்று இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
ஆன்ஃபீல்ட் அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் முற்பாதியில் இரு தரப்பினராலும் கோலடிக்க முடியவில்லை. ஆயினும், பிற்பாதி யில் லிவர்பூலின் கை ஓங்கத் தொடங்கியது. 51ஆம் நிமிடத்தில் சாலா அனுப்பிய பந்தை வெகு நேர்த்தியாக வலைக்குள் தள்ளி கோலாக்கினார் சாடியோ மானே. இப்பருவ பிரிமியர் லீக்கில் அவர் அடித்த 18வது கோல் இது.
இந்த அதிர்ச்சியில் இருந்து செல்சி வீரர்கள் மீளுவதற்குள், அடுத்த 2வது நிமிடத்தில் பார்ப் போரை வியக்கவைக்கும் வகை யில் ஒரு கோலடித்து லிவர்பூலின் வெற்றியை உறுதிசெய்தார் சாலா.
“அந்த கோல் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. என்ன ஓர் அருமையான கோல்!,” என்று மெச்சிய லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், செல்சிக்கு எதிராக தமது குழுவினர் ஆடிய விதம் கண்டு பெருமைப்படுவதாகவும் கூறினார்.
முன்னதாக நடந்த ஆட்டத்தில் கிரிஸ்டல் பேலஸ் குழுவை 3-1 என்ற கோல் கணக்கில் மான் செஸ்டர் சிட்டி தோற்கடித்தது. இரண்டாமிடத்தில் இருந்தபோதும் சிட்டி, லிவர்பூலைவிட ஓர் ஆட்டம் குறைவாக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon