பிரபல அமெரிக்க கோல்ஃப் விளையாட்டாளர் டைகர் உட்ஸ் (நடுவில்) 11 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் வென்றிருப்பதன்மூலம் தமது விளையாட்டு வாழ்க்கை இன்னும் முடிந்துவிடவில்லை என உலகிற்கு அறிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த 'அகஸ்டா மாஸ்டர்ஸ்' தொடரில் மகுடம் சூடினார் உட்ஸ். முக்கியமான போட்டிகளில் இது அவருக்கு 15வது பட்டம். திருமணத்திற்குப் பிறகு உட்ஸ் பல பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்தது தெரியவந்ததால் அவரின் மனைவி எலின் விவாகரத்து பெற்று, அவரைவிட்டுப் பிரிந்தார். சொந்த வாழ்வில் வீசிய புயல் உட்சின்ஆட்டத்திறனிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்தத் துயரமான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு உட்ஸ் பட்டம் வென்றிருப்பது அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் (படத்தில்) பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. உட்சின் இந்த எழுச்சிக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், முன்னாள் கூடைப்பந்து பிரபலம் மேஜிக் ஜான்சன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். படம்: இபிஏ
சீறிப் பாய்ந்த கோல்ஃப் புலி 11 ஆண்டுகளுக்குப் பின் பட்டம்
1 mins read
-

