கார்டியோலா: அரையிறுதி உறுதி

மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்தின் அரையிறுதிச் சுற்றில் தமது குழு நுழைவது திண்ணம் என்று மான்செஸ்டர் சிட்டி குழு நிர்வாகி பெப் கார்டியோலா கூறி உள்ளார்.
சக பிரிட்டிஷ் குழுவான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பருக்கு எதிரான காலிறுதி முதல் ஆட்டத் தில் 1-0 என சிட்டி தோற்றது. இந்த நிலையில், காலிறுதியின் இரண்டாம் ஆட்டம் நாளை அதி காலை சிட்டியின் எட்டிஹாட் அரங்கில் நடைபெறவுள்ளது.
கடந்த பருவத்திலும் காலிறுதி வரை முன்னேறிய சிட்டி, லிவர்பூல் குழுவிடம் 5-1 என ஒட்டுமொத்த கோல் கணக்கில் தோற்று வெளி யேறியது.
இம்முறையும் அதேபோன்றதோர் அபாயம் சிட்டியைச் சூழ்ந்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டைப் போல இம்முறை எதுவும் நடக்காது என்று தீர்க்கமாகச் சொல்கிறார் கார்டியோலா.
"என்ன நடக்கும் என்று என் னிடம் கேட்டால், அரையிறுதியில் நாங்கள் இருப்போம் என்றே கூறு வேன். அப்படித்தான் என் உள் மனம் சொல்கிறது," என்றார் அவர்.
லீக் கிண்ணத்தை ஏற்கெனவே வென்றுவிட்ட நிலையில், எஃப் ஏ கிண்ண இறுதிப் போட்டிக்கும் சிட்டி முன்னேறியுள்ளது. அதோடு, இங்கிலிஷ் பிரிமியர் லீக், சாம்பி யன்ஸ் லீக் என மேலும் இரு பட்டங்களை வென்று, ஒட்டு மொத்தமாக இந்தப் பருவத்தில் தான் பங்கேற்ற நான்கு போட்டித் தொடர்களிலும் மகுடம் சூட சிட்டிக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது.
முன்னதாக, சாம்பியன்ஸ் லீக் கில் சிட்டி அதிக பதற்றத்துடன் விளையாடுவதாக அக்குழுவின் வீரர் குண்டோகன் கூறியிருந்தார்.
இந்நிலையில், "அது உண்மை இல்லை," என கார்டியோலா மறுத் துள்ளார். அதே நேரத்தில், அடுத்த டுத்த சுற்றுகளுக்கு முன்னேறுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்பதையும் அவர் ஒத்துக்கொண் டார்.
"காற்பந்து ஒரு முடிவற்ற பயணம். சில நேரங்களில் முன் னேறிச் செல்வீர்கள்; சில வேளை களில் பின்தங்க நேரிடும்," என்று அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!