சுடச் சுடச் செய்திகள்

எதிரணி வீரரால் ஆர்சனல் ஏற்றம்

லண்டன்: கோல்காப்பாளர் பென் ஃபோஸ்டரின் மெத்தனத்தால் ஆர்சனல் குழுவிற்கெதிராக நேற்று அதிகாலை நடந்த இங் கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வாட்ஃபர்ட் குழு மண் ணைக் கவ்வ நேரிட்டது.
ஆட்டத்தின் பத்தாவது நிமிடத் தில் சக வீரர் அனுப்பிய பந்தைப்  பெற்று, அதை இன்னொருவருக்குக் கடத்துவதில் சற்றே அசட்டையாக இருந்தார் ஃபோஸ்டர். பந்துக்குப் பின்னாலேயே ஆர்சனல் ஆட்டக் காரர் பியர் எமரிக் ஒபமெயாங் வருவதை உணர்ந்ததும் ஃபோஸ்டர் பந்தை விரைவாக வேறு ஒருவரிடம் தள்ளிவிட முயன்றார். ஆனால், அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை.
அவர் பந்தை உதைக்கவும் அதைத் தமது கால் கொண்டு ஒபமெயாங் தடுக்கவும் சரியாக இருந்தது. இதனால், பந்து திசை மாறி வலைக்குள் புகுந்தது.
நடப்பு பிரிமியர் லீக் பருவத்தில் ஒபமெயாங்கின் 18வது கோல் இது.
அதற்கடுத்த நிமிடத்திலேயே வாட்ஃபர்ட் குழுத் தலைவர் டிராய் டீனி ஆர்சனல் வீரர் லூக்கஸ் டொரேராவின் முகத்தில் முழங்கை கொண்டு இடித்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற நேர்ந்தது. இது வாட்ஃபர்டுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது.
இவ்வெற்றியின்மூலம் ஆர்சனல் பட்டியலின் நான்காம் இடத்திற்கு முன்னேறியது.
இந்தப் பருவத்தில் எதிரணி அரங்கில் ஆர்சனல் கோலேதும் விட்டுத் தராதது இதுவே முதல் முறை. அதேபோல, இந்தப் பரு வத்தில் சொந்த அரங்கில் ஆடிய ஆட்டங்களில் வாட்ஃபர்ட் தோற்ற தும் இதுவே முதன்முறை.
அடுத்தபடியாக, யூரோப்பா லீக் ஆட்டத்தில் ஆர்சனல் நாளை மறு நாள் நேப்போலியுடன் மோதுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon