மூட்டை கட்டும் கோஹ்லி அணி

மூட்டை கட்டும் கோஹ்லி அணி

1 mins read
5a0d855b-5729-4b2f-a407-05eeeb6d8658
விராத் கோஹ்லி -

மும்பை: இவ்வாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விராத் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் அணியாக வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுவரை விளையாடிய எட்டுப் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்று, இரண்டு புள்ளிகளுடன் பட்டியலின் கடைநிலையில் உள்ளது பெங்களூரு அணி. அடுத்து வரும் ஆறு ஆட்டங்களிலும் வென்றால் அவ்வணி 'பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதுவும் நிச்சயமில்லை. நேற்று முன்தினம் இரவு ரோகித் சர்மாவை (படம்) தலைவராகக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அவ்வணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. முதலில் பந்தடித்த பெங்களூரு அணி எழு விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுக்க, ஒரு ஓவர் எஞ்சியிருந்த நிலையில் இலக்கை எட்டிய மும்பை அணி பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது. படம்: ஏஎஃப்பி