வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் காயம் அடைந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஹைதராபாத் அணிக்கெதிராக அறிமுகம் ஆன ஜோசப், 12 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுக்களைக் கைப் பற்றி ஐபிஎல் வரலாற்றுச் சாதனைப் படைத்தார். கடந்த 13ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்தப் போட்டியில் அதன்பின் பீல்டிங் செய்யவில்லை. இந்நிலையில் தோள்பட்டை காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.
அல்ஜாரி ஜோசப் விலகல்
1 mins read

