ஸ்பர்ஸை 4-3 கோல் கணக்கில் வென்றது மென்சஸ்டர் சிட்டி

யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் காற்பந்தாட்டத்தில் மென்சஸ்டர் சிட்டி அணிக்கும் டொட்டன்ஹம் ஹாட்ஸ்பர்ஸ் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் மென்சஸ்டர் சிட்டி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் முதல் கோலை மென்சஸ்டர் சிட்டிக்குப் பெற்றுத் தந்த ரஹீம் ஸ்டர்லிங், 21ஆம் நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்தார். மென்சஸ்டர் சிட்டி வீரர்கள் ஃபர்னாண்டோ சில்வா 11ஆம் நிமிடத்திலும் செர்கியோ அகுவேரோ 59ஆம் நிமிடத்திலும் ஆளுக்கொரு கோலைப் புகுத்தினர். 

ஆட்டத்தின் முதற்பாதியில் தென்கொரிய காற்பந்தாளர் சொன் ஹியுங் மின் தமது அணிக்காகக் கோல் புகுத்தியபோது ஸ்பர்ஸின் வெற்றிக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் மென்சஸ்டர் சிட்டி அணி விரைவில் முந்திக்கொண்டது. 73ஆம் நிமிடத்தில் ஸ்பர்ஸ் வீரர் ஃபெர்னாண்டோ யொரென்டே ஒரு கோலைப் புகுத்தியபோதும் மென்சஸ்டர் சிட்டியை இறுதியில் விஞ்ச முடியவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon