லிவர்பூலின் தற்காப்பைத் தகர்க்கமுடியாது துவண்டுபோன போர்ட்டோ

லிவர்பூலின் தற்காப்பைத் தகர்க்கமுடியாது துவண்டுபோன போர்ட்டோ

1 mins read

போர்ட்டோ: சாம்பியன்ஸ் லீக் காற் பந்தின் இன்னோர் அரையிறுதி ஆட்டத்தில் லா லீகா முன்னணிக் குழுவான பார்சிலோனாவை அடுத்த மாதம் 2ஆம் தேதி எதிர் கொள்கிறது பிரிமியர் லீக் பட்டிய லில் முன்னிலையில் இருக்கும் லிவர்பூல். இரண்டு சுற்று ஆட்டங்களும் முடிந்த நிலையில், 1-6 ஒட்டு மொத்த கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது லிவர்பூல். மந்தமாக தொடங்கிய நேற் றைய ஆட்டத்தில் சொந்த மண் ணிலேயே கோல் போடும் பல வாய்ப்புகளைத் தவறவிட்டது போர்ட்டோ. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் தான் விழுந்தது முதல் விழுந்தது. சாடியோ மனே போட்ட அக் கோலைத் தொடர்ந்து சாலா, ஃபெர்மினோ, வேன் டைக் ஆகியோரும் கோல் போட்டனர். மிலிட்டாவ் போர்ட்டோ குழுவிற் கான ஆறுதல் கோல் போட்டதால் நேற்றைய ஆட்டம் 1-4 என முடிந் தது. லிவர்பூல் நிர்வாகி கிளோப்பின் வருகைக்குப் பின் தற்காப்பு, தாக் குதல் என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது லிவர்பூல். "இப்பருவத்தில் நாங்கள் சிறப் பாக விளையாடி வருகிறோம். இந்த ஆட்டத்தின் பிற்பாதியில் எதிரணியினர் சோர்ந்துவிட்டனர். ஆட்டம் எங்கள் கட்டுக்குள் வந்து விட்டதால் கோல் போட முடிந் தது. "போட்டி ஆட்டம் ஒன்றில் முதன்முறையாக பார்சிலோனா விற்கு எதிராக விளையாடவுள் ளோம். அந்நாளை நான் வெகுவாக எதிர்பார்க்கிறேன்," என்றார் லிவர் பூல் நிர்வாகி கிளோப்.