கார்டியோலா: கொடுமையான தோல்வி

மான்செஸ்டர்: சர்ச்சைக்குரிய கோலால் தங்கள் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இருந்து வெளியேற நேர்ந்தது கொடுமையான ஒன்று என்று கூறியுள்ளார் மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா.
நேற்று அதிகாலை நடந்த காலி றுதி ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் தனது சொந்த மண்ணில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் எதிர் கொண்டது சிட்டி.
முதல் சுற்றில் ஸ்பர்ஸ் 1-0 எனவும் நேற்றையச் சுற்றில் சிட்டி 4-3 எனவும் முன்னிலை வகித் தன.
ஆனால், ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை அடிப்படையில் 4-4 ஆட்டம் சமநிலை கண்டதால், எதிரணி மண்ணில் கோல் புகுத்திய ஸ்பர்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல் 20 நிமிடங்களில் இரு குழுக்களும் பதிலுக்குப் பதில் கோல் போட, விறுவிறுப்பாக அமைந்த ஆட்டத்தில் 3-2 என சிட்டி முன்னிலை வகித்தது.
அதை 59வது நிமிடத்தில் அகுவேரோ போட்ட கோல் மேலும் வலுப்படுத்தியது.
ஆனால், அடுத்த சுற்றுக்குச்சென்றுவிடலாம் என்றிருந்த சிட் டியின் கனவைத் தவிடு பொடியாக் கியது ஸ்பர்ஸ் வீரர் ஃபெர்னான்டோ லோரென்டே போட்ட கோல்.
ஆட்டம் முடிய 17 நிமிடங்களே இருந்த நிலையில் அவர் போட்ட கோல் குறித்து காணொளி உதவி நடுவர் முறை நாடப்பட்டது. அப்போதும் நடுவரின் முடிவு ஸ்பர்ஸ் குழு விற்குச் சாதகமாகவே அமைந்தது.
தொடர்ந்து சளைக்காமல் விளையாடிய சிட்டி, காயம் பட்டதற் கான கூடுதல் நேரத்தின்போது  இன்னோர் கோல் போட்டது.
ஆனால், ஸ்டெர்லிங் போட்ட அந்த கோலை நடுவர் ‘ஆஃப்சைட்’ என நிராகரித்தபோது வெற்றி தேவதை ஸ்பர்ஸ் பக்கம்தான் இருக்கிறாள் என்பது உறுதியா னது.
இதனால், ஒரே பருவத்தில் நான்கு முக்கிய கிண்ணங்களையும் வெல்லும் சிட்டியின் வாய்ப்பு நழு வியது.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய சிட்டியின் நிர்வாகி கார்டியோலா, “லோரெண்டேயின் கோல் ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது கைகளில் பட்டுச் சென்றது போல் தெரிகிறது.
“ஆனால் நடுவர் பார்த்த கோணத்தில் பந்து கைகளில் பட்டு செல்லவில்லை. காணொளி நடுவர் முறையை நான் மதிக்கி றேன்.
“அரையிறுதிக்குள் சென்று விடலாம் என்று இருந்த நிலையில், எங்களது கோல் ஆஃப்சைட் என்று நிராகரிக்கப்பட்டது.
“இது மிகவும் கொடுமையான ஒன்று. ஆனால் நடந்தது நடந்து விட்டது. அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்,” என்று வருந்தி னார். அதே சமயம், “ஆட்டம் முடிந்த விதம் நம்பமுடியாத ஒன்று. எனக்கு பெருமையாக இருக்கி றது,” என்றார் ஸ்பர்ஸ் நிர்வாகி பொக்கேட்டினோ.
வரும் 30ஆம் தேதி அரையிறுதி ஆட்டத்தில் அஜக்ஸ் குழுவை எதிர்கொள்கிறது ஸ்பர்ஸ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon