‘இந்திய அணி கோஹ்லியை மட்டுமே நம்பி இல்லை’

புதுடெல்லி: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து பலரும் விமர்சித்து வரும் வேளையில் முதன்முறையாக பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி (படம்) தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"அணித் தேர்வில் நான் தலை யிடுவது கிடையாது. அணித் தேர்வு தொடர்பாக ஏதாவது ஆலோசனை இருந்தால் அணித் தலைவர் மூலம் தெரிவிப்பேன்.
"உலகக் கிண்ணப் போட்டிக்கு 15 வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்பதால் ஒரு சில வீரர்கள் தவிர்க்க முடியாமல் விடுபட்டு போவார்கள்.
"இந்தப் போட்டி நீண்ட காலம் கொண்டது என்பதால் 16 வீரர்கள் இருந்தால் சௌகரியமாக இருக் கும் என்று நாங்கள் அனைத்துலக கிரிக்கெட் மன்றத்திற்கு தெரி வித்து இருந்தோம். ஆனால் ஐசிசி 15 வீரர்களுக்குத்தான் அனுமதி அளித்தது.
"அணிக்குத் தேர்வாகாத வீரர் கள் மனவேதனை அடையக்கூடாது. வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் வாய்ப்பை இழந்த வீரர்கள் எப் போது வேண்டுமானாலும் அணிக்கு அழைக்கப்படலாம்.
"பந்தடிப்பில் 4வது வீரர் வரி சையில் எப்பொழுதும் குறிப்பிட்ட வீரரை மட்டுமே இறக்கிக் கொண்டிருக்க முடியாது. அது அவ்வப்போது மாறுதலுக்குரிய இடமாக இருக்கும்.
"முதல் 3 வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்ய முடியாது. ஆடு களத்தின் தன்மை, எதிரணி ஆகியவற்றைப் பொறுத்தே 4வது வரிசை வீரர் முடிவு செய்யப்படு வார்," என்றார்.
இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியின் ஆட்டத் தையே அதிகம் நம்பி இருக்கிறதா என்று சிலர் கேட்கிறார்கள்.
"கடந்த 5 ஆண்டுகளில் இந் திய அணியின் செயல்பாடுகளை பார்த்தால் அனைத்து வகை ஆட் டத்திலும் இந்திய அணி முதல் மூன்று இடத்திற்குள்ளேயே இருக் கிறது.
"இதன் மூலம் இந்திய அணி ஒரு குறிப்பிட்ட வீரரையே நம்பி இல்லை என்பது அனைவருக்கும் புரியும். இப்படி நிலையான வெற்றி களை அணி பெறுவதற்குப் பல வீரர்கள் எல்லா நேரங்களிலும் சீராக விளையாட வேண்டியது அவசியமானதாகும். நிலையான வெற்றியின் ஒட்டுமொத்த பெரு மையும் அணியைத்தான் சாரும்.
"கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
"அந்த அணியில் பன்முகத் தன்மை கொண்ட வீரர்கள் உள்ள னர். அவர்கள் பந்தடிப்பு, பந்து வீச்சில் வலுவாக இருக்கிறார்கள். அத்துடன் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள்.
"அதனால் இப்போதைக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக விளங்குகிறார்கள்.
"உலகக் கிண்ணம் போன்ற பெரிய போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்திலும் உச்சபட்ச திறனை வெளிப்படுத்த வேண்டும்," என்று இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!