அணிக்குத் திரும்பிய ஆம்லா

அணிக்குத் திரும்பிய ஆம்லா

2 mins read

கேப்டவுன்: இழந்த ஆட்டத் திறனை மீட்கப் போராடி வரும் முன்னணி வீரரான ஹசிம் ஆம்லா, 36, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் இலங்கை அணிக்கெதிரான ஐந்து போட்டி கள் கொண்ட ஒருநாள் தொட ரின் முதல் மூன்று போட்டிகளுக் கான அணியில் ஆம்லாவிற்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்நிலையில், அவர் அணி யில் சேர்க்கப்பட்டிருப்பது வியப்பு அளிப்பதாக உள்ளது. மாறாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அனைத் துலக ஒருநாள் போட்டிகளில் அடியெடுத்து வைத்தது முதல் அணியில் இடம்பெற்றிருந்த ரீஸா ஹென்ரிக்ஸுக்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆட இடம் கிடைக்கவில்லை. இதற்கிடையே, கடந்த நான் காண்டுகளாக அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் விளை யாடாத திமுத் கருணரத்னே இலங்கை அணித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் லசித் மலிங்காவிடம் இருந்து தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அத னுடன், மலிங்கா தலைமையில் ஆடிய ஒன்பது ஒருநாள் போட்டி களில் ஒன்றில்கூட இலங்கை அணி வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணி: டு பிளஸ்ஸி (தலைவர்), குவின்டன் டி காக், டூமினி, அய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்கியா, ரபாடா, டேல் ஸ்டெயின், தம்ரைஸ் ஷாம்ஸி, பிரிட்டோரியஸ் பெலுக்வாயோ, இம்ரான் தாகிர், வேன் டெர் டசன். இலங்கை அணி: கருண ரத்னே (தலைவர்), திரிமானே, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, வாண்டர்சே, திசர பெரேரா, மலிங்கா, இசுரு உடானா, சுராங்க லக்மல், நுவான் பிரதீப், ஜீவன் மெண்டிஸ், மிலிந்த சிரிவர்தன.