அமீர் இல்லை; இந்தியா நிம்மதி

அமீர் இல்லை; இந்தியா நிம்மதி

1 mins read

இஸ்லாமாபாத்: அபாயகரமான வேகப்பந்து வீச்சாளரான முகம்மது அமீர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெறா தது இந்திய அணிக்கு நிம்மதி அளிக்கக்கூடிய விஷயம். ஈராண்டுகளுக்குமுன் இங்கி லாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ் தானும் மோதின. அப்போட்டியில் ஆடிய அமீர், ரோகித் சர்மா, ‌ஷிகர் தவான், விராத் கோஹ்லி என இந்திய அணியின் முதல் மூன்று ஆட்டக் காரர்களை ஆட்டமிழக்கச் செய் தார். இதனால் பாகிஸ்தான் எளி தாக வென்று, கிண்ணத்தைக் கைப்பற்றியது. ஆயினும், அந்தப் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இவர் ஐந்து விக்கெட்டுகளை மட் டுமே வீழ்த்தியது உலகக் கிண்ண அணியில் இடம்பெறும் வாய்ப்பைப் பறித்தது. அடுத்த மாதம் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் ஆறு போட்டிகளில் மோதவுள்ளன. அதில் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் அமீர் உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.