ஐபிஎல்: மும்பை அணிக்கு கைகொடுத்த சகோதரர்கள்

புதுடெல்லி: பந்தடிப்பு, பந்துவீச்சு என இரு துறைகளிலும் சகோ தரர்கள் குருணால் பாண்டியாவும் ஹார்திக் பாண்டியாவும் அசத்த, மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்களில் டெல்லி கேப்பிட் டல்ஸ் அணியை வீழ்த்தியது. 
இதன்மூலம் ஐபிஎல் டி20 கிரிக்கெட் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் மும்பை அணி இரண்டாமிடத்திற்கு முன்னேறி யது.
அணித் தலைவர் ரோகித் சர்மாவும் குவின்டன் டி காக்கும் இணைந்து மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். இரு வரும் சேர்ந்து முதல் விக்கெட் டிற்கு 57 ஓட்டங்களைச் சேர்த் தனர். ரோகித் 30 ஓட்டங்களிலும் டி காக் 35 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 
இடையில் ஓட்ட விகிதம் சற்று மந்தமானபோதும் கடைசி நேரத் தில் பாண்டியா சகோதரர்கள் அதி ரடியாக ஆட, மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப் பிற்கு 168 ஓட்டங்களை எடுத்தது.
குருணால் பாண்டியா 26 பந்துகளில் 37 ஓட்டங்களையும் ஹார்திக்  பாண்டியா 15 பந்துகளில் 32 ஓட்டங்களையும் விளாசினர்.
அடுத்து பந்தடித்த டெல்லி அணி ராகுல் சாஹர், ஜஸ்பிரீத் பும்ரா, குருணால் பாண்டியா ஆகி யோரின் பந்துகளில் ஓட்டம் எடுக்கத் திணறினர். இறுதியில் அவ்வணியால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ‌ஷிகர் தவான் 35 ஓட்டங்களை எடுத்தார். 
மும்பை அணித் தரப்பில் சாஹர் மூன்று விக்கெட்டுகளையும் பும்ரா இரு விக்கெட்டுகளையும் பாண்டியா சகோதரர்கள் ஆளுக்கு ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
ஆட்டநாயகன் விருது வென்ற ஹார்திக், “வலைப்பயிற்சியில் தீவிரம்  காட்டி வருவதற்கு நல்ல பலன் கிட்டத் தொடங்கியுள்ளது. இன்னும் ஐந்து ஆட்டங்கள் இருக் கும் நிலையில் எனது அதிரடி ஆட்டம் தொடரும் என நம்பு கிறேன்,” என்று சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon